100 இளம்பெண்களை மயக்கி உல்லாசம் நிர்வாண வீடியோவை காட்டி பணம் பறிப்பு: ‘பிளாக்மெயில்’ வாலிபர் கைது

திருமலை: இளம்பெண்களை காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்த வாலிபர், அவர்களின் நிர்வாண வீடியோவை காண்பித்து பல லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பறித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோதட்டூரைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார் (23). சிறு வயதில் இருந்தே போதை பழக்கத்திற்கு அடிமையான இவர் பி.டெக் முதலாமாண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017ல் செயின் பறிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து கடப்பா, விஜயவாடா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் இவர், ஷேர்சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்களை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார். இவரது மாயாஜால வார்த்தைகளால் மயங்கிய பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

அவ்வாறு உல்லாசமாக இருப்பதை அந்த பெண்களுக்கு தெரியாமல் நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவுசெய்துள்ளார். அதை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம், ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி ஆன்லைனில் பணம் பறித்துள்ளார். இதுதவிர சில பெண்களிடம் நகைகளை பறித்துக்கொண்டும் ஏமாற்றியுள்ளார். இவ்வாறு இவரிடம் நூற்றுக்கணக்கான பெண்கள் சிக்கி சீரழிந்துள்ளனர். மேலும் பணம், நகைகளையும் இழந்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக குடும்ப மானம் கருதி வெளியே சொல்லாமலும் போலீசில் புகார் தெரிவிக்காமலும் பலர் இருந்துள்ளனர்.

ஆனால் சில பெண்கள் கொடுத்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த பிரசன்னகுமாரை பிடிக்க கடப்பா எஸ்பி அன்புராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த வாரம் கடப்பாவில் பல வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் பெண்களை சீரழித்த பிரசன்னகுமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் அம்பலமானது. அப்போது அவர், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்களை ஏமாற்றி அவர்களுக்கு தெரியாமல் நிர்வாண வீடியோ எடுத்து ‘பிளாக்மெயில்’ செய்து பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறித்தது, வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து கடப்பா சிறையில் அடைத்தனர்.

Related Stories: