பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசப்போவதில்லை: பெட்ரோலிய அமைச்சர் ஹாதீப் சிங் பேச்சால் சர்ச்சை

டெல்லி: கொரோனா தளர்வுகளுக்கு பின் பெட்ரோல், டீசலின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹாதீப் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் விலை உயர்வு குறித்து பேசப்போது இல்லை என அவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்; இந்த தகவலை தெரிவித்தார். கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது தற்போது பெட்ரோல் 15% வரையிலும், டீசல் பயன்பாடு 10% வரையிலும் அதிகரித்திருப்பதாக ஹாதீப் சிங் தெரிவித்தார்.

இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து எதுவும் பேசப்போவதில்லை என தெரிவித்த அவர்; விலை ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஆனால் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எந்த நாவடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் டீசல் விலையும் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி பேசாமல் இருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Related Stories: