ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் கடல் 50 மீட்டர் உள்வாங்கியது: நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நிற்கும் நிலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடல் சுமார் 50 மீ. அளவுக்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வர மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

மன்னார் வளைகுடா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடல் சுமார் 50 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியதால் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படகுகளை பாதுகாப்பாக மீட்கும் பணியை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: