சிங்கம்புணரி அருகே புளியமரம் சாய்ந்து சிறுவன் படுகாயம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் புளிய மரம் வேரோடு சாய்ந்ததில் அவ்வழியாக டூவீலரில் சென்றவர் மீது மரம் விழுந்தது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம், வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தனது குடும்பத்துடன் டூவீலரில் திண்டுக்கலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மருதிப்பட்டி அருகே வந்த போது பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த பெரிய புளியமரம் சாலையில் சாய்ந்தது.

இதில் டூவீலர் சென்ற பாக்கியராஜ் குடும்பத்தினர் மீது மரம் விழுந்தது. இதில் பாக்கியராஜ் மகன் விமல் (10) தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவ்வழியாக வந்த காரில் வந்தவர்கள், காயமடைந்தவர்களை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து எஸ்வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

Related Stories: