×

அரக்கோணம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டது

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்- புளியமங்கலம் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள யார்டு பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் இரட்டை ரயில் இன்ஜின் சென்றது. அப்போது எதிர்பாராமல் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டு மண்ணில் புதைந்தது. தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். சில மணி நேரம் போராடி தடம் புரண்ட இன்ஜினை மீட்டனர். இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜின் தடம்புரண்டதால் ரயில்போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags : Arakonam , Hexagon, train locomotive, track derailed
× RELATED அரக்கோணம் அருகே ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு