சேலம் போலீசாரின் வசூல் வேட்டை பட்டியலை வெளியிட்டு எஸ்.பி. கடும் எச்சரிக்கை

சேலம்: சேலத்தில் வழக்கு விசாரணை, சான்று அளிக்க போலீசார் நடத்தும் வசூல் வேட்டை பணப்பட்டியலை எஸ்பி வெளியிட்டு, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  சேலம் மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீஅபிநவ், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பிக்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, எழுத்தர், தனிப்பிரிவு ஏட்டு ஆகியோர் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களின் மீது விசாரணை நடத்தவும், சூதாட்டம், சந்துக்கடை மதுவிற்பனை, கஞ்சா விற்பனை நடத்தவும், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கு நற்சான்று அளிக்கவும், வசூல் வேட்டை நடத்துவதை பட்டியலிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் எவ்வளவு தொகையை வசூல் செய்கின்றனர் என்பதை பட்டியலாக போட்டுள்ளார். அதில் இன்ஸ்பெக்டர்கள் தரப்பில், சிவில் வழக்கு விசாரணைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும், வெடிமருந்து குடோன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம், லாட்ஜ்களுக்கு ரூ.2 ஆயிரம், பியூட்டி பார்லர், ஸ்பா உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 ஆயிரம், தாபா ஹோட்டல் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம், கல்குவாரி ரூ.10 ஆயிரம், மணல் குவாரி ரூ.20 ஆயிரம், சந்துக்கடை, வெளிமாநில மதுவிற்பனைக்கு ரூ.10 ஆயிரம் சூதாட்டத்திற்கு ரூ.10 ஆயிரம், விபத்து வழக்கில் ஜாமீனில் விட ரூ.7 ஆயிரம் என மாதந்தோறும் பண வசூலில் ஈடுபடுகிறீர்கள்.

அதேபோல், ஸ்டேஷன் எஸ்ஐக்கள், எழுத்தர்கள் மற்றும் தனிப்பிரிவு ஏட்டுகள், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாரும் பெருமளவில் வசூல் வேட்டை நடத்துகிறீர்கள். இவை அனைத்தும் தெரியவந்துள்ளது. அதனால், சட்டவிரோதமான செயல்களுக்கு அனுமதியளித்து வசூல் வேட்டையில் ஈடுபடுவதை உடனே கைவிட வேண்டும். பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சான்று கேட்போரிடம் வசூல் நடத்தக்கூடாது. இத்தகைய செயலில் யாரேனும் இனி ஈடுபடுவது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டால், சிறந்த நிர்வாகத்தை அளிக்க இயலாது. சட்டத்திற்கு உட்பட்டு, லஞ்சமற்ற நிலையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு எஸ்பி ஸ்ரீஅபிநவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து ஸ்டேஷன்களுக்கும் வந்துள்ள இந்த எச்சரிக்கை சுற்றறிக்கை போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்கு எவ்வளவு...?

ரைட்டருக்கு...

1.பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்

பேட்ஜ் என்.ஓ.சி தர            ரூ.500 முதல் 1000 வரை

2. நில, பண தகராறு விசாரணை

நிலவரம் அறிய            ரூ.1000

3. சூதாட்டம்            தலா ரூ.1000.

4. சந்து கடையில்

மது விற்பனை            ரூ.200.

5. சமூக விரோதிகளை

ஜாமீனில் விடுவிக்க        ரூ.200.

7. எப்ஐஆர் நகல் தர        ரூ.100.

சப்-இன்ஸ்பெக்டருக்கு...

1. சிவில் தகராறு        ரூ.5,000 முதல் ரூ.20000 வரை.

2. சூதாட்டம்        ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை

3. மணல் கடத்தல்        ரூ.5,000 முதல் ரூ.30,000 வரை

4.விபத்து வழக்கில்

சிக்கியவரை ஜாமீனில் விட ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை

5. குட்கா விற்பனை,

சட்ட விரோத பார், சந்து கடை    ரூ.2 ஆயிரம்.

6. வாகன சோதனை        ரூ.2 ஆயிரம்

இன்ஸ்பெக்டர்

1. சிவில் தகராறு        ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை

2. லாட்ஜுகள்        ரூ. 2 ஆயிரம்.

3.ஸ்பா, பியூட்டி பார்லர்கள்    ரூ.5 ஆயிரம்.

4. தாபா ஓட்டல்கள்              ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை.

5.கிரானைட் குவாரிகள்,  

சூதாட்டம்               ரூ.10 ஆயிரம்

6. மணல் கடத்தல்              ரூ. 20 ஆயிரம்.

7. சந்து கடை               ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை

8. விபத்தில் சிக்கியவர்களை

 விடுவிக்க               ரூ.10 ஆயிரம்.

Related Stories: