நாடு முழுவதும் நேற்றும் முறையே 30, 34 காசு உயர்வு பெட்ரோல், டீசல் விலை 15 நாளில் ரூ.3.50 அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

சேலம், அக்.17: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. இதனால், நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. இம் மாதத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை (4ம் தேதி தவிர) 15 நாள் விலையேற்றப்பட்டுள்ளது. இந்த 15 நாளில் பெட்ரோல் ரூ.3.12ம், டீசல் ரூ.3.86ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் பெட்ரோல் 30 காசும், டீசல் 33 முதல் 35 காசு வரையும் உயர்த்தப்பட்டது.

இதனால், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.40க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 30 காசு உயர்ந்து ரூ.102.70க்கு விற்கப்பட்டது.  டீசல் விலை ரூ.98.26ல் இருந்து 33 காசு உயர்ந்து ரூ.98.59க்கு விற்பனையானது. சேலத்தில் பெட்ரோல் ரூ.102.72ல் இருந்து 30 காசு அதிகரித்து ரூ.103.02 ஆகவும், டீசல் ரூ.98.60ல் இருந்து ரூ.34 காசு அதிகரித்து ரூ.98.94 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதன்காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>