×

மணல் திருட்டு வழக்கில் ஜாமீன் பெற்றவர்கள் இரண்டு அரசுப்பள்ளிகளுக்கு ரூ.90 ஆயிரம் வழங்க உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணலை லாரியில் கொண்டு சென்ற வழக்கில் கடந்த செப்.29ல் கைதான பாலமுருகன், மருதுபாண்டியன், பிரேம்நாத், மூர்த்தி மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் ேகாரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஆனந்தி ஜாமீன் வழங்கி, பாலமுருகன் ரூ.20 ஆயிரமும், மற்றவர்கள் தலா ரூ.15 ஆயிரமும் மதுரை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் திரும்ப பெறாத வகையில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், ராமநாதபுரத்தில் நடந்த மணல் திருட்டு வழக்கில் கைதான முகம்மது ரிஷ்வானுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி எஸ்.ஆனந்தி, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் நிதிக்கு ரூ.50 ஆயிரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த ராமவடிவேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: உரிய அனுமதியின்றி டிராக்டரில் மணல் எடுத்துச் சென்றதாக திருவாடானை போலீசார் வழக்கு பதிந்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். டிராக்டரை விடுவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ெபாங்கியப்பன், மனுதாரர் ரூ.50 ஆயிரத்தை சுற்றுச்சூழல் நிதியத்திற்கு வழங்கிடும் வகையில் 2 வாரத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Tags : Sand theft, bail, public school, order
× RELATED வண்டுகள் துளைக்காமல் இருக்க பாதுகாக்கப்படும் 90 ஆயிரம் நெல் மூட்டைகள்