சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கத்தில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டில்  வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று காவல் கட்டுப்பாட்டு மர்ம நபர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து, காவல் கட்டுபாட்டு அறை போலீசார் உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  விசாரணையில் அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில், சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் கோனிமேடு குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த புவனேஷ்(21)பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் நேற்று முன்தினம் சரத்குமார் நடித்த அரசு என்ற திரைப்படத்தை பார்த்து, ஆத்திரமடைந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. புவனேஷ் சற்று மனநிலை பாதித்தவர் என்பதால், அவரையும், அவரது குடும்பத்தாரை போலீசார் எச்சரித்து விட்டுவிட்டனர்.

Related Stories:

More
>