விபத்து காயங்கள் மேலாண்மையில் முதல் 60 நிமிடம் பொன்னான நேரம்: மியாட் மருத்துவமனை தகவல்

சென்னை: உலகளவில் 199 நாடுகளில் சாலை போக்குவரத்து விபத்துகளில் இந்தியா முதலிடத்திலும், சீனா மற்றும் அமெரிக்கா இந்தியாவை தொடர்ந்து 2வது மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. சாலை விபத்து காரணமாக ஏற்படும் உலகளாவிய மரணத்தில் இந்தியாவின் பங்களிப்பு 11% ஆகும். நோயாளியின் முடிவை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காலகட்டம் விபத்து காயத்திற்கு பிறகான முதல் 60 நிமிடங்களாகும். இது பொன்னான நேரம் என்று அழைக்கப்படுகிறது. கடுமையாக காயமடைந்தால், உயிர்பிழைக்க உங்களுக்கு 60 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இருக்கும். நீங்கள் அப்போது இறக்காமல் இருந்தாலும் மூன்று நாட்கள் கழித்தோ அல்லது இரண்டு வாரங்கள் கழித்தோ பாதிக்கப்படலாம்.

இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் சரியான மீட்பு வசதிகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பொன்னான நேரத்திற்குள் மருத்துவமனையை அடைய முடிவதில்லை. மியாட் விபத்து மற்றும் டிராமா குழுவில், பயிற்சி பெற்ற துணை மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கியுள்ளனர். எலும்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை சிறுநீரகம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நுரையீரல், இரைப்பை குடல், இன்டென்சிவ் கேர் ஆகியவற்றின் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உடலியல் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றி நோயாளிகளுக்கு விரைவான, முழுமையான கவனிப்பை வழங்குகின்றனர்.

Related Stories: