சொல்லிட்டாங்க...

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டும் என நாட்டு மக்கள் கனவிலும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதைவிட முக்கியமாக சிலிண்டர் விலை ரூ.1000த்தை தொடவுள்ளது.    : - காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.

ஒன்றிய ஏஜென்சிகளை பாரதிய ஜனதா அரசு தவறாக பயன்படுத்தியிருந்தால் பாதிக்கும் மேற்பட்ட மகாராஷ்டிரா அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள்.    :- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ்.

சசிகலா அதிமுகவை கைப்பற்றி காப்பாற்றுவாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.   :- விசிக தலைவர் திருமாவளவன்.

அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்டவர்தான்  சசிகலா. சமாதிக்கு போகட்டும், கண் கலங்கட்டும். இந்த நடிப்புக்கு ஆஸ்கர்  அவார்டு வேண்டுமானால் கொடுக்கலாம்.    : - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Related Stories:

More
>