தனி கொடி, தனிச் சட்டம் நாகா அமைப்பு பிடிவாதம்: 2 ஆண்டுக்கு பின் மீண்டும் பேச்சு

கொஹிமா: வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் அண்டை நாடான மியான்மரிலும் நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து தனி நாகலாந்து உருவாக்க வேண்டும் என ஆயுதம் ஏந்தி சில குழுவினர் போராடினர். அவர்களின் ஒருங்கிணைந்த நாகலாந்து தேசிய சோஷியலிஸ்ட் கவுன்சிலுடன் ஒன்றிய அரசு கடந்த 1997ல் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த 2014ல் ஒன்றிய அரசு தரப்பு மத்தியஸ்தராக தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவரது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அமைதி ஒப்பந்தம் கடந்த 2015ல் போடப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தம் சில காரணங்களுக்காக இறுதி செய்யப்படவில்லை. சமீபத்தில் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, நாகா குழுக்களுடன் மத்தியஸ்தம் செய்ய ஒன்றிய அரசு தரப்பு பிரதிநிதியாக ஏ.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடன் நாகலாந்து தேசிய சோஷியலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் பேச்சுவார்த்தை 2 ஆண்டுக்குப்பிறகு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கி உள்ளது. இது குறித்து நாகா குழு கூறுகையில், ‘தனி கொடி, அரசியலமைப்பு என்ற எங்கள் கொள்கையில் உறுதியாக உள்ளோம்’ என்றது.

Related Stories: