சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு இன்று புதிய மேல்சாந்திகள் தேர்வு

திருவனந்தபுரம்: சபரிமலை  ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்க இன்னும் ஒரு மாதமே  உள்ளது. இந்தநிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை கோயில்  திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர்  முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து நேற்று  வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

இன்று முதல் ஐப்பசி மாத பூஜைகள்  தொடங்கும். 21ம் தேதி வரை ேகாயில் நடை திறந்திருக்கும். இந்த 5 நாட்களிலும் தினமும்  10,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்கு  குறைவான மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் இன்று முதல்  தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்திற்காக சபரிமலை  மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்திகள் தேர்வு இன்று நடைபெறுகிறது.

Related Stories:

More
>