இளம் வீரர் பரோட் மரணம்

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணி வீரர் அவி பரோட் (29). ரஞ்சி கோப்பை 2019-20 சீசனில் பட்டம் வென்ற சவுராஷ்டிரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடியவர். 2011ல் யு-19 இந்திய அணியின்  கேப்டனாகவும் இருந்துள்ளார். சவுராஷ்டிரா அணிக்காக ரஞ்சி,  விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போன்ற உள்நாட்டு தொடர்களில் விளையாடி உள்ளார். முஷ்டாக் அலி டி20 தொடரில் 55 பந்துகளில் 122 ரன்கள் விளாசி சாதனை படைத்தவர். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு அவி பரோட் உயிரிழந்தார். தாய், மனைவியுடன் அவி வசித்து வந்தார். அவரது மனைவி இப்போது 4 மாத கர்ப்பிணி. அவி  மரணத்திற்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

More
>