காஷ்மீரில் என்எஸ்ஜி பாதுகாப்பு

குர்கான்: தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ‘கருப்பு பூனைகள்’ எனப்படும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) கடந்த 1984ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் 37வது நிறுவன தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அரியானா மாநிலம், குர்கானின் மானேசரில் நடந்த நிகழ்ச்சியில் என்எஸ்ஜி தலைவர் கணபதி கலந்து கொண்டு பேசியதாவது: ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தின் மீது கடந்த ஜூன் 27ம் தேதி, நாட்டிலேயே முதல் முறையாக டிரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். விமானப்படை தளப்பகுதிகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக என்எஸ்ஜி படையின் தொழில்நுட்ப கண்காணிப்பு குழு ஜம்முவுக்கு விரைந்து, அங்கு டிரோன் தடுப்பு உபகரணங்களை நிறுவியது. எதிர்காலத்தில் டிரோன் தாக்குதல்களை தடுக்க, பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் விமானப்படை தளங்களில் என்எஸ்ஜி படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் வெற்றிகரமாக பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: