மழையால் விளைச்சல் பாதிப்பு எதிரொலி பல்லாரி வெங்காயம் குடமிளகாய் விலை திடீர் உயர்வு: தக்காளி விலை சற்று குறைந்தது

சென்னை: மழையால் விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக பல்லாரி, குடமிளகாய் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதே வேகத்தில் வாங்க ஆட்கள் இல்லாததால் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. ஆயுத பூஜையையொட்டி பழங்கள், காய்கறி விலை கடுமையாக அதிகரித்தது. தக்காளி விலை எப்போதும் இல்லாத வகையில் மொத்த விலையில் கிலோ ரூ.40 வரை விற்பனையானது. இது சில்லறை விலையில் கிலோ ரூ.60 வரை உயர்ந்தது. இதே போல பழங்கள் விலை கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்து காணப்பட்டது.இந்த நிலையில் ெஜட் வேகத்தில் அதிகரித்த தக்காளி விலை தற்போது குறைய தொடங்கியுள்ளது.

அதாவது, தொடர்ச்சியாக ஆயுதப்பூஜை, விஜயதசமி என்று 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்தது. இதனால், பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். காய்கறி வாங்க ஆட்கள் இல்லததால் தக்காளி விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது கிலோ தக்காளி ரூ.40லிருந்து ரூ.30 ஆக விலை குறைந்துள்ளது. அதே போல பல்லாரி, குடமிளகாய் விலையும் தற்போது உயர தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்லாரி ஆந்திரா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை வந்தது. அங்கு பெய்த மழையால் பல்லாரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளது. தற்போது 40 லாரிகள் வரை தான் பல்லாரி வெங்காயம் வருகிறது. இதனால், பல்லாரி விலை அதிகரித்துள்ளது. பல்லாரி(ஆந்திரா) கிலோ ரூ.10லிருந்து ரூ.15, பல்லாரி(மகராஷ்டிரா) ரூ.20லிருந்து ரூ.30 ஆக விலை அதிகரித்துள்ளது. அதே போல கர்நாடகா, ஊட்டி போன்ற பகுதியில் இருந்து குடமிளகாய் வருகிறது. அங்கு மழையால் பாதிக்கப்பட்டு குடமிளகாய் ரூ.20லிருந்து ரூ.40, ரூ.50 என்று விலை அதிகரித்துள்ளது.

அதே போல பீன்ஸ் ரூ.80லிருந்து ரூ.50, ரூ.60க்கும், கேரட் ரூ.60லிருந்து ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.20லிருந்து ரூ.15, அவரைக்காய் ரூ.60லிருந்து ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.20லிருந்து ரூ.15, சேப்பங்கிழங்கு ரூ.30லிருந்து ரூ.25, இஞ்சி ரூ.60லிருந்து ரூ.50 என்று விலை குறைந்துள்ளது. அதே போல பீட்ருட் ரூ.20, பச்சை மிளகாய் ரூ.20, கத்தரிக்காய் ரூ.25, வெண்டைக்காய் ரூ.15, புடலைங்காய் ரூ.15, நூக்கல் ரூ.20, முள்ளங்கி ரூ.15 என்று விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை. சில்லறை மார்க்கெட்டில் கிலோவுக்கு குறைந்தப்பட்சம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

Related Stories: