ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல். மேலும் தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல்(தற்செயல் தேர்தல்) நடத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு  மாநில தேர்தல் ஆணையம்  கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான  மறுநிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது. தொடர்ந்து கடந்த 6 மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

இதற்கான வாக்குகள் 12ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து நடத்தை விதிமுறைகள் அனைத்தையும் விலக்கி ெகாள்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் 16ம் தேதி( நேற்றுடன்) காலை 10 மணிக்கு முடிவடைந்துள்ளது. இதனால், தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: