ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி..!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தா்கள் அக்டோபா் 17 முதல் 21-ஆம் தேதி வரை சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.  அதில், இணையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கோவிலுக்கு வரும் பக்தா்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுடன், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழும் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்நிதானம் நடை அக்டோபா் 21ம் தேதியன்று அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை ஆட்டவிசேஷத்தை முன்னிட்டு மீண்டும் நவம்பா் 2-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, அடுத்த நாள் நடையடைக்கப்படும். அதன் பிறகு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 15-ஆம் தேதி நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: