×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா: 1,434 பேர் டிஸ்சார்ஜ்: 15 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,233 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,233 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 26,85,874 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 15,022 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,29,773 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,92,83,503 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 734 பேர் ஆண்கள் மற்றும் 499 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,434 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 26,34,968 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 15 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 35,884 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 160 பேரும், கோவையில் 136 பேரும், செங்கல்பட்டில் 90 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,Tamil Nadu ,Health Department , Tamil Nadu, Corona, Department of Health
× RELATED கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி