காட்பாடி, விருதம்பட்டு, திருவலத்தில் 85 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது: குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் எஸ்பி ெசல்வகுமார் உத்தரவின்பேரில், குற்றசம்வங்களை தடுக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் காட்பாடி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றசம்பவங்கள் நடந்தால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. அதேசமயம் தனியார் வணிகவளாகங்களில் வைக்கப்பட்டு வந்த கேமராக்களை ஆய்வு செய்து பின்னர் குற்றவாளிகளை பிடிக்க வேண்டிய நிலையாக இருந்தது.

இந்நிலையில் காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் காட்பாடி, விருதம்பட்டு, திருவலம் ஆகிய பகுதிகளில் முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்று சுமார் 85 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளனர். இதன்மூலம் காட்பாடி சப்-டிவிஷனில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு, குற்றசம்பவங்கள் தடுக்க நடவடிக்ைக எடுக்கப்படும். சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதால், வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More
>