திருவண்ணாமலையில் எம்பி நிதியில் இருந்து சரவிளக்குகளுடன் கூடிய கம்பத்தில் உயர்மின் விளக்குகள் அமைப்பு

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் முதல் கலெக்டர் அலுவலகம் வரை 2 கி.மீ. தூரம் சாலையின் நடுவே, சரவிளக்குகளுடன் கூடிய கம்பத்தில் உயர்மின் விளக்குகள், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் கடந்த 1989ம் ஆண்டு உருவானது. கடந்த 32 ஆண்டுகளில், இந்த மாவட்டம் படிப்படியான வளர்ச்சியை அடைந்து வருகிறது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி, மாவட்ட நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பெரும்பாலான அலுவலகங்கள், வேங்கிக்கால் கிராம ஊராட்சியில் அமைந்துள்ளன.எனவே, திருவண்ணாமலை நகராட்சி எல்லை முடியும் இடமான அண்ணா நுழைவு வாயில் தொடங்கி, கலெக்டர் அலுவலகம் வரையிலான நெடுஞ்சாலையின் நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் பொருத்தவில்லை.

எனவே, இந்த சாலையில் பயணிப்போர் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்பட்டனர். மாவட்ட தலைநகரின் மிக முக்கியமான இந்த சாலையை பயன்படுத்துவோரும், பயணிப்போரும் அதிகம். அதோடு, வளர்ச்சியடைந்து வரும் திருவண்ணாமலை- வேலூர் சாலையில், வணிக நிறுவனங்களும் பெருகிவிட்டன. எனவே, இருள் சூழ்ந்த சாலையில், வாகன நெரிசலில் கடந்து செல்வது சவாலாக இருந்தது. இந்நிலையில், அண்ணா நுழைவு வாயில் தொடங்கி, புதிய பைபாஸ் சாலை மேம்பாலம் அமைந்துள்ள தீபம் நகர் வரையில், சாலையின் நடுவே சரவிளக்குகளுடன் கூடிய கம்பத்தில் உயர்மின் கோபுர விளக்குகளை, தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அமைக்க எம்பி சி.என்.அண்ணாதுரை நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, முதற்கட்டமாக தற்போது அண்ணா நுழைவு வாயில் தொடங்கி, கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 2 கி.மீ. தூரம் சாலையின் நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படுகிறது. அதன் மூலம், திருவண்ணாமலை- வேலூர் சாலையில் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அண்ணா நுழைவு வாயில் வரை மின்ெனாளி பிரகாசத்தில் ஜொலிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. ேமலும், பெருநகரங்களில் அமைந்துள்ளதை போல, மின்விளக்கு கம்பத்தில் சரவிளக்குகள் பொருத்தியிருப்பது, சாலையில் அலங்கார அணிவகுப்பு போல காட்சியளிக்கிறது.

Related Stories:

More
>