அமெரிக்காவில் கால்பந்து போட்டி நடைபெற்ற மைதானத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 4 பேர் காயம் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் போட்டி முடிவடையும் தருணத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

இதில் 4 பேர் காயமடைந்துள்ளார். மேலும் அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு காரணமாக மைதானத்தில் ரசிகர்கள் இடையே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் தப்பி செல்வதற்காக முயன்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்களை பாதுகாப்பிற்காக கீழே படுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. மொபைல் நகர போலீசார் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பி சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது.

Related Stories:

More
>