×

சருமம் பளபளக்க பாலாடை

நன்றி குங்குமம் தோழி

* வெயிலினால் வியர்த்து நீரினில் நனைந்து போகும் சருமமானது மழைக்காலத்தில் கடுங்குளிரால் வறண்டு காணப்படும்.

* இதைத் தடுக்க தினமும் காலையும், மாலையும் நல்ல மாய்ச்ரைஸர் லோஷன் உபயோகப்படுத்தலாம்.

* தரமான மாய்ச்ரைஸர் லோஷனை தேர்வு செய்வதன் மூலம் குளிரிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து அழகாக இருக்கலாம்.

* நமது சருமம் அதிகம் வறண்டு போகக்காரணம் உடலிலே தேவையான நீர்ச்சத்து இல்லாமல் போவதே.

* ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவினை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்திற்கு பேக் போடலாம். இதனால்
சருமம் வறண்டு போகாமல், நீர்த்தன்மையை இழக்காமல் பாதுகாக்கும்.

* முட்டை வெள்ளைக்கருவுடன், பாதாம் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பாலாடை இவைகளைக் கலந்தும் பேக் போட்டு வந்தால், சருமத்திற்குப் பொலிவு கிடைக்கும்.

* உடலில் சரும வறட்சியைத் தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊற விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உடலின் அயர்வு நீங்கி ரத்த ஓட்டம் சீராக இருக்கும். புத்துணர்வும் கிடைக்கும்.

* உதடுகள் வறட்சியினால் வெடித்துப்போகும். இதைத்தடுக்க தினமும் உதடுகளில் வாசலினை தடவிக் கொள்ளலாம்.

* பொதுவாக சருமம் பொலிவுடன் விளங்க நாம் உட்கொள்ளும் உணவிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், மோர் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் கலந்த சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.

* தினமும் சோப்பு உபயோகிப்பதைத் தவிர்த்து வேல் வாழை உபயோகிக்கலாம். இதனால் சருமத்திற்கு மிருது தன்மையும், இயற்கையான எண்ணெய்ப்பசையும் கிடைக்கும்.

* மழைக் காலங்களில் பாத வெடிப்பு வராமல் இருக்க வாரம் ஒரு முறை நீரில் எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு சிறிது உப்பு, தரமான ஷாம்பூ சிறிது கலந்து கால்களை அதனுள் அமிழ்த்தி பியூமிக்ஸ்டோன் கொண்டு தேய்த்து ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பிறகு மாய்ச்ரைஸர் தடவ வேண்டும். பாதம் பட்டு போல் மென்மையாக இருக்கும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Tags :
× RELATED சிறுத்தையை கொடூரமாக கொன்று, அதன்...