சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினமும் சென்று வருபவர்களை போலவே, சசிகலா அங்கு சென்றதை பார்ப்பதாக அவர் கூறினார்.

மேலும் யானை பலம்கொண்ட அதிமுகவை ஒரு கொசு தாங்கிக்கொண்டிருப்பதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது. சசிகலா என்ன நடித்தாலும் தமிழ்நாட்டு மக்களிடம் செல்லாது. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் விடுவதால் தமிழகத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என ஜெயகுமார் விமர்சித்து பேசியுள்ளார்.

அதனையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிதி மீறல் என்று அவர் தெரிவித்தார். ஆனால் இதற்கெல்லாம் போராட்டம் நடத்தி சசிகலாவை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என அவர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.  

மேலும் அதிமுக கட்சி கொடியை சசிகலா பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அது ஒருகாலமும் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>