கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் தேசியக்கொடி கலரில் ஜொலிக்கும் மின் அலங்காரம்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கங்கை முதல் கடாரம் வரை படையெடுத்து வெற்றி கொண்டு ஆட்சி புரிந்த ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் உலகின் பெரும்பாலான நாடுகளை ஆட்சி புரிந்தார். அவரது நினைவாக வெற்றி கொண்ட நாடுகளில் இருந்து வெற்றியின் நினைவாக அங்கிருந்த அரிய பொக்கிஷங்களை எடுத்து வந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் கலாச்சாரம் பண்பாடு உடை நாகரீகம் அணிகலன்கள் ஆகியவைகளை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில். தனது தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற கோயிலை கட்டினார். 13 அரை அடி உயரமும் 60 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் ஒரே சிவலிங்கமான பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.

 ஐநா சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது இந்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின்கட்டுப்பாட்டில் உள்ள. இக்கோயிலில் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசி 100 கோடிக்கு மேல் மக்களுக்கு செலுத்தப்பட்டதை எடுத்துக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய அளவில் இந்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பாக 100 இடங்களை தேர்வு செய்து அதில் தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் சிறப்பு ஒளி அமைப்பை சரஸ்வதி பூஜையான நேற்று அமைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் பொதுமக்கள், பக்தர்கள் சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: