பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஓவியம்: ஊராட்சி மன்ற கட்டிடத்தில் வரைந்த கல்லூரி மாணவி

பேராவூரணி: 75வது, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒன்றிய அரசு “ஆசிகா அம்ரித் மஹோத்சவ்” என்ற சிறப்பு நிகழ்ச்சியினை, 15.9.2021 முதல் 15.9.2022 வரை தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்திட அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில், அக்.2 முதல், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகிய கட்டிடங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கொண்டு சுகாதாரம் தொடர்பாக சுவர் ஓவியம் வரைந்திட அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உயிர் சிதைவுற்ற கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட 5 தலைப்புகளில், சிறந்த ஒவியம் வரைந்து மாவட்டம் மற்றும் வட்டார அளவில் தேர்வு செய்து முதல் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

இதனொரு பகுதியாக பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில், இளங்கலை அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வரும், பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த ஷோபனா என்ற மாணவி ஒவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை ஒன்றியக்குழுத் தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் வத்சலா முத்துராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தவமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)குமரவடிவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், .மகேஷ், ஆகியோர் பார்வையிட்டு பாராட்டினர்.

Related Stories: