×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருக்கிறது.


Tags : Tamil Nadu ,Weather Center , Atmospheric mantle circulation, Tamil Nadu, heavy rainfall
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14...