செவ்வந்தி பூக்கள் விற்பனையாகாததால் குப்பையில் வீசி சென்ற வியாபாரிகள்

திருப்பூர்: திருப்பூரில் செவ்வந்தி பூக்கள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகாததால் வியாபாரிகள் பூக்களை குப்பையில் வீசி சென்றுள்ளனர்.திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் பணியாற்ற வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலும் இருந்து தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தொழில் நிறுவனங்கள், வீடுகளை சுத்தம் செய்து பொரி, சுண்டல் போன்றவைகளை சாமிக்கு படையலிட்டு, செவ்வந்தி பூ சாட்டி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் பல்வேறு பகுதியிலிருந்து செவ்வந்தி பூக்கள் அதிகளவில் திருப்பூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் கடைகளில் 1 அடி செவ்வந்தி பூ மாலை ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆயுதபூஜை சமயத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செவ்வந்தி பூ விற்பனையாகாததால் பூக்களை வியாபாரிகள் குப்பைகளில் கொட்டி சென்றுள்ளனர். அதேபோல வாழை கன்றுகளையும் ரோட்டோரங்களில் வீசி சென்றுள்ளனர். மேலும், ஆயுதபூஜைக்கு சேகரமான குப்பைகள் மேட்டுப்பாளையம் பகுதி, நெசவாளர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மலைபோல் குவிந்துள்ளன. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: