இளையான்குடி அருகே கல்லூரி பஸ்சை மறித்த போதை இளைஞர்கள்: வைரலாகும் வீடியோ

இளையான்குடி: போதையில் தனியார் கல்லூரி மகளிர் பஸ்சை இளைஞர்கள் வழி மறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளையான்குடி அருகே குமாரகுறிச்சியில் முளைப்பாரி திருவிழா இரண்டு நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் திருவிழாவை முன்னிட்டு மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் , சினிமாவில் வரும் காமெடி நடிகர் வடிவேலு பாணியில் பட்டா பட்டி டிரவுசர் அணிந்து கொண்டு கூச்சல் போட்டுள்ளனர்.

அப்போது இளையான்குடியிலிருந்து மாணவிகள் செல்லும் தனியார் கல்லூரி பஸ்சை வழி மறித்து பீர்பாட்டிலை நடுரோட்டில் வைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகள் சென்ற பஸ் முன்பு ஆபாசமாக நடனமாடி, நடுரோட்டில், கால் மேல் கால் போட்டு படுத்து கொண்டும், நடனமாடியும் ரகளை செய்துள்ளனர். இதை வீடியோ எடுத்து தங்களது செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் பரவ விட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>