நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கி 60 அடி கிணறு அருகே நின்ற பேருந்து: ஓட்டுநர் திறமையால் 25 பயணிகள் தப்பினர்

கோபி:  நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையத்தில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. ஓட்டுநர் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.கோபியில்  இருந்து அளுக்குளி, குருமந்தூர், நடுப்பாளையம், மூனாம்பள்ளி வழியாக  நம்பியூர் நோக்கி நேற்று 2 ம் நம்பர் அரசு பேருந்து 25க்கும் மேற்பட்ட  பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை நம்பியூரை சேர்ந்த சம்பத்குமார் ஓட்டிச்சென்றார்.  கண்டக்டராக வேலுசாமி இருந்தார்.

பேருந்து  குருமந்தூர் அடுத்துள்ள நடுப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே மற்றொரு அரசு பேருந்து வந்தது. அந்த பேருந்துக்கு வழிவிட சம்பத்குமார் பேருந்தி திரும்பினார்.அப்போது 60 அடி ஆழ கிணறு இருந்தது.  சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் அருகில் உள்ள பள்ளத்தில் நிறுத்தினார்.  பேருந்தை  உடனடியாக ஓட்டுநர் நிறுத்தியதால் பெரும் சேதம்  தவிர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பயணிகளை மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி  விட்டு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பேருந்து மீட்கப்பட்டது.

Related Stories: