ஆற்காடு அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டிட பணிகள்: வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

ஆற்காடு: ஆற்காடு அருகே கிராம நத்தம் அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த  கட்டிட பணிகளை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமத்தில் நத்தம் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில்  சண்முகம் என்பவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில்  வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று கட்டிட பணிகளை அதிரடியாக தடுத்து நிறுத்தினர். மீண்டும் இதுபோன்று ஆக்கிரமித்து கட்டிடப் பணிகள் நடைபெற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>