×

நகை வாங்கப் போறீங்களா? ரேட் இதுதான்! : சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.35,720-க்கு விற்பனை!!!

சென்னை: தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. தங்கம் விலை நிலையான நிலையில் இல்லாமல் இருந்து வந்தது நகை வாங்குவோரிடையை ஒரு குழப்பமான நிலை ஏற்படுத்தி வந்தது. நகை வாங்கினால், எங்கே மறுநாள் விலை குறைந்து விடுமோ? என்ற அச்சமும் மக்களிடையே நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து சவரன் ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,465-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.67.40-க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் நவராத்திரி பண்டிகை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் நகை விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Looking to buy jewelry? This is the rate! : Rs 400 less per razor for sale at Rs 35,720 !!!
× RELATED நவ-30: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43க்கு விற்பனை