×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா; 166 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 17,861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.51 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.40 கோடியை தாண்டியது. இன்று காலை 9.45 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 15,981 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,53,573 ஆக உயர்ந்தது.

* புதிதாக 166 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,51,980 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,861 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,99,961 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,01,632 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை  97,23,77,045 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , Corona to 15,981 people in India in the last 24 hours; 166 deaths: 17,861 people recovered from the infection and discharged
× RELATED கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி