பெண் விவசாயிகள் தினம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மகிளா கிஷான் திவாஸ் என்னும் பெண் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது திட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.சாந்தி தலைமை வகித்தார். பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் நிலையம் மூலம் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் , காளான், தேனீ வளர்ப்பு, நடவு, அறுவடை ஆகிய பெண்கள் எளிதாக பணிபுரியும் வகையில் காணொலி மூலம் விளக்கி கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் செந்தில்குமார், புனிதா, சிவகாமி ஆகியோர் பெண்களுக்கு சேமிப்பதின் அவசியம், ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் தோட்டக்லையின் வாய்ப்புகள்,  பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மண்புழு வளர்ப்பு, புறக்கடை கோழி வளர்ப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் 40 பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>