×

அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே கரிமேடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக  100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களை,  ரயில்வே துறை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர்கள், மாற்று இடம் வழங்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மனு அளித்தஅவர்களுக்கு, குடிசை மாற்று வாரிய வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த  புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் அரசு நிலத்தை,  செங்கல்பட்டு ஆர்டிஓ சாஜிதா பர்வீன்,  ஏஎஸ்பி ஆசிஷ் பச்சாரே மற்றும் அதிகாரிகள் நேற்று  ஆய்வு செய்தனர்.

இதை அறிந்ததும், அங்கு சென்ற மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு, ‘‘எதற்காக நிலத்தை ஆய்வு செய்கிறீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த 7 ஏக்கரில் கோயில் மற்றும் குளம்  ஆகியவை அமைந்துள்ளது. நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வாடகை வீட்டிலும், புறம்போக்கு இடத்திலும் வசிக்கிறோம். இ்ங்கு குடியிருப்பு கட்ட அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர். இதையடுத்து அதிகாரிகள், திரும்பி சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Officer, civilian, siege
× RELATED பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம்