×

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 இடங்களில் 13 பதவிகளை கைப்பற்றிய திமுக

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 18 இடங்களில், 13 இடங்களில் திமுக வெற்றி பெற்று, பதவிகளை கைப்பற்றியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 18 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 1வது வார்டு திமுக வேட்பாளர் மோகனா இளஞ்செழியன் 2215 வாக்குகள், 2வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட வளர்மதி மனோகரன் 2058, 3வது வார்டு சுயேட்சை வேட்பாளர் 1261 வாக்குகள், 4வது வார்டு திமுக வேட்பாளர் பாலாஜி 2751, 5வது வார்டு திமுக வேட்பாளர் ஆதிலட்சுமி 2924 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

6வது வார்டு திமுக வேட்பாளர்  ராம்பிரசாத் 1763 வாக்குகள், 7வது வார்டு திமுக வேட்பாளர் ஹேமலதா 2750, 8வது வார்டு அதிமுக வேட்பாளர் விமல்ராஜ் 5765, 9வது வார்டில் திமுக வேட்பாளர் மலர்க்கொடி குமார் 2555, 10வது வார்டு திமுக வேட்பாளர் கோட்டீஸ்வரி 2399, 11வது வார்டு பாஜ வேட்பாளர் நாகலிங்கம் 2499, 12வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரேகா ஸ்டான்லி 3692, 13வது வார்டு திமுக வேட்பாளர் தேவபாலன் 3041, 14வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் 2550, 15வது வார்டு அதிமுக வேட்பாளர் பேபி சசிகலா 2219, 16வது வார்டு திமுக வேட்பாளர் பரசுராமன் 3011, 17வது வார்டு திமுக வேட்பாளர் திவ்யப்பிரியா 2890, 18வது வார்டு திமுக வேட்பாளர் சங்கரி 2582 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம் 1 மற்றும் 9வது மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 1வது வார்டில் திமுக சார்பில் நித்யா சுகுமார், அதிமுக சார்பில் லலிதா பாய் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அதில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், அதிமுக வேட்பாளர் லலிதா பாயை விட 15,981 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தின் 49 ஊராட்சிகள்  22 ஒன்றியக் கவுன்சிலர்கள், 2 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. தொடர்ந்து கடந்த 12ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக  10, அதிமுக  8, பாமக  2, சுயேட்சை 2 இடங்களை கைப்பற்றினர்.

இவர்களில் நெம்மேலி ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் தேசிங்கு, மாவட்ட திமுக செயலாளரும், ஊரகத் தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசனை நேற்று சந்தித்தார். அப்போது அவர், ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், 2 பாமக கவுன்சிலர்களும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியத்தனர். இதனால், திமுகவின் பலம் 13 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில், திருப்போரூர் ஒன்றியக்குழு தேர்தலில் 22 இடங்களில் 19 கவுன்சிலர் பதவிகளுக்கு நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட் இழந்தது.

அதேப்போல், மக்கள் நீதி மையம் 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு டெபாசிட் இழந்தது. 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் டெபாசிட் இழந்தது. அமமுக, 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 2 இடங்களில் டெபாசிட் இழந்தது. அந்த கட்சியை சேர்ந்த  2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 2 இடங்களிலும் டெபாசிட் காலியானது.

டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்
மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்ட அதிமுக லலிதாபாய் 10,528, பாமக வசந்தி கண்ணையன் 5,084 வாக்குகள், நாம் தமிழர் விஜயலட்சுமி சதீஷ் 1301, தேமுதிக கோமதி லட்சுமணன் 393 வாக்குகள் பெற்றனர். 9வது வார்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வனிதா மகேந்திரன் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயா உலகநாதனை விட 5,363 வாக்குகள் அதிகம் பெற்றார். அதிமுக விஜயா உலகநாதன் 10,486, பாமக சங்கீதா தினகரன் 7634, நாம் தமிழர் கட்சி காயத்ரி கருணாமூர்த்தி 1741, தேமுதிக திவ்யபாரதி நந்தகுமார் 724 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தனர். மொத்தத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுசிலர் பதவிக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 28 டெபாசிட் இழந்தனர்.Tags : DMK ,Kanchipuram Union , Kanchipuram, Union, Position, DMK`
× RELATED புகையிலை விற்ற 13 பேர் கைது