மாநிலங்களுக்கு இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. நேற்று வரையிலான கடந்த 9 மாதங்களில் மாநில அரசுகளுக்கு 100 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இவற்றில் இன்னும் 10 கோடியே 53 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல், மாநிலங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் அது கூறியுள்ளது.

Related Stories:

More
>