×

சாப் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இன்று இந்தியா - நேபாளம் மோதல்

மாலே: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் இந்தியா - நேபாளம் அணிகள் இன்று மோதுகின்றன. மாலத்தீவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக டிரா செய்ததால் சற்று தடுமாறிய இந்திய அணி, பின்னர் சிறப்பாக விளையாடி நேபாளம், மாலத்தீவுகள் அணியை வீழ்த்தி பைனல் வாய்ப்பை உறுதி செய்தது. சாப் கோப்பை கால்பந்து தொடரில் 12வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா, இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

8வது முறையாக கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்கும் சுனில் செட்ரி தலைமையிலான இந்திய அணி, பைனலில் இன்று நேபாள அணியை எதிர்கொள்கிறது. நேபாளம் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது. இரவு 8.30க்கு தொடங்கும் இப்போட்டியில் வென்றால், 2019ல் தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் பதவியேற்ற பிறகு இந்திய அணி வெல்லும் முதல் கோப்பையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இரு அணிகளும் மோதிய 3 ஆட்டங்களில் இந்தியா 2 வெற்றி, 1 டிரா கண்டுள்ளது. 


Tags : India ,Nepal ,SAAP Cup , Final match, India, Nepal, clash
× RELATED அரையிறுதியில் இந்தியா ஏமாற்றம்