×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேர் சிறை பிடிப்பு: இலங்ைக கடற்படை அட்டூழியம்

நாகை: நாகை அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் இரண்டு விசைப்படகில் கடந்த 11ம்தேதி நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு இலங்கை பருத்திதுறைக்கு தென்கிழக்கே நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததோடு, 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதில் கைதான 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 23 பேரும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Tags : Tamil Nadu , Border, Tamil Nadu Fishermen, Capture, Sri Lanka, Navy
× RELATED கனமழை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை