பலாத்காரம் செய்து பெண் கொலை: சிறுவன் கைது

சென்னை: திருக்கழுக்குன்றம், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமு. இருளர் சமூகத்தை சேர்ந்த இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி (50). இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் பின்புறம் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ராமுவின் மூத்த மகன் முத்தன் எழுந்து பார்த்தார். அப்போது, வீட்டின் பின்புறமுள்ள மலை முகட்டு பகுதியில், ஜோதி மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது, முத்தனை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். உடனே முத்தன், தாய் ஜோதியின் அருகில் சென்று எழுப்பியபோது இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய நபர் யார் என்று விசாரித்து வந்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என்பதும், மானாமதியில் உள்ள காயலான் கடையில் வேலை செய்யும் இச்சிறுவன், ஜோதி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும், தடுத்த ஜோதியை சிறுவன் தாக்கியதால் அவர் இறந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து, தலைமறைவான 15 வயதுடைய சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Stories:

More
>