×

டாக்டரிடம் பண மோசடி லண்டன் பட்டதாரி கைது

சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் கார்த்திக் (34), வாடகைக்கு வீடு தேடி வந்தார். இவரை தொடர்புகொண்ட ஒருவர், வாடகைக்கு வீடு ஏற்பாடு செய்வதாக கூறி, ரூ.67 ஆயிரம் பெற்றார். ஆனால், வீடு ஏற்பாடு செய்யாமல் ஏமாற்றியுள்ளார். இதுபற்றி கார்த்திக், போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த புஷ்பராஜ் (34) என்பவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர், லண்டனில் எம்.எஸ்.சி.கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்து முடித்து சென்னை திரும்பியதும், கடந்த 3 வருடமாக வாடகைக்கு வீடு உள்ளதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.


Tags : London , Doctor, money laundering, London, arrest
× RELATED 300 ஏக்கரில் 49 படுக்கை அறையுடன் பிரமாண்ட...