×

அக்கம் பக்கத்து வீடுகளில் 110 சவரன், ரூ.18 லட்சம் அபேஸ்

ஆலந்தூர்: கிண்டி, நேரு நகர், இளங்கோ தெருவில் மளிகை கடை நடத்தி வரும் தங்கபாண்டி என்பவரின் மனைவி சுகந்தி (30). இவர், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களிடம் அன்பாக பழகி, நட்பை வளர்த்துள்ளார். பின்னர் அவர்களிடம், உறவினருக்கு ஆபரேஷன், மளிகை கடை தொழிலில் நஷ்டம், சகோதரிக்கு திருமணம் என பல்வேறு காரணங்களை கூறி, பலரிடம் 5 சவரன் வீதம் 110 சவரன் நகைகளை பெற்று அடகு வைத்துள்ளார்.

மேலும், ஏலச் சீட்டு, வட்டிக்கு பணம் என மேலும் 10 பேரிடம் ரூ.18 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால், அதை திருப்பி தராமால் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளார். பணம், நகையை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது, திருப்பி தராததால்  கிண்டி காவல் நிலையத்தில் சுகந்தி, மீது புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சுகந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : House, jewelry, money, shaving, theft,
× RELATED தீபாவளி வசூலை தடுக்கும் வகையில்...