×

காலிபிளவர் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் பிளாஸ்திரி: சாப்பிட்ட பெண்ணுக்கு வாந்தி, மயக்கம்

சென்னை: திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் செயல்படும் பக்கோடா கடையில் நேற்று முன்தினம் திருநின்றவூர், பெரியார் நகரைசேர்ந்த பானு, காலிபிளவர் பக்கோடா வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதனை தங்கைக்கு சாப்பிட கொடுத்துள்ளளார். அதனை சாப்பிட்ட அவருக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர், அவர் எடுத்த வாந்தியில் ரத்தக்கறையுடன் கூடிய பிளாஸ்திரி இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் செய்தார். இதனையடுத்து நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில், பூந்தமல்லி சுகாதார மாவட்ட ஆய்வாளர் பிரபு தலைமையில் ஊழியர்கள் சூப்பர் மார்கெட் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சுகாதார அதிகாரிகள் சூப்பர் மார்கெட்டுக்கு ரூ.5,200 அபராதம் விதித்தனர்.

Tags : Cauliflower baguette, blood stain, plaster, vomiting, dizziness
× RELATED ஊத்துக்கோட்டை, வாந்தி, வயிற்றுபோக்கு,...