×

பரோட்டா சாப்பிட்டதால் கல்லூரி மாணவன் பலி?

சென்னை: பரோட்டா சாப்பிட்டதால் கல்லூரி மாணவன் இறந்தானா அல்லது வேறு ஏதாவது ஒரு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சென்னை கொளத்தூர், வி.வி.நகர், 5வது தெருவை சேர்ந்த அரியகுட்டி மகன் சிபி சங்கமித்ரன் (17). அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு விட்டு, 10 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

அதிகாலை 3 மணிக்கு சிபி சங்கமித்ரனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சிபி சங்கமித்ரனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Baroda, college, student, killed
× RELATED கட்டாய திருமண ஏற்பாடு: கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை