மக்கள் குறைகளை கேட்டபோது இங்கிலாந்து சர்ச்சில் எம்பி குத்திக்கொலை

லண்டன்: இங்கிலாந்தில் தேவாலயத்தில் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு கொண்டிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் எம்பி டேவிட் அமெஸ், கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கிழக்கு லண்டனின் கடற்கரை நகரமான லீ-ஆன்-சீயில் உள்ள பெல்பேர்ஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் தனது தொகுதி மக்களை ஒவ்வொரு வாரமும் சந்திப்பதை கன்சர்வேடிவ் கட்சி எம்பி டேவிட் அமெஸ் வழக்கமாக கொண்டிருந்தார். 69 வயதான இவர், கடந்த 1983 முதல் சவுத் என்ட் வெஸ்ட் தொகுதி எம்பி.யாக  இருந்து வந்தார்.  

இந்நிலையில், வழக்கம் போல நேற்று தேவாலயத்தில் மக்களை சந்தித்து கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் கத்தியால் அவரை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். அவரை கத்தியால் குத்திய 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>