மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் ஆப்கான் மசூதியில் 37 பேர் சிதறி பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 37 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, அவர்களுக்கும் ஐஎஸ்-கரோசன் தீவிரவாத அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் அமைப்பு, குண்டுவெடிப்பு போன்ற நாசவேலைகளையும் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, குந்துஸ் பகுதியில் உள்ள ஷியா பிரிவினர் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 46 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கரோசன் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், கந்தகார் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினர் மசூதி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியில் இருந்த 37 பேர் உடல் சிதறி பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories: