சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இதையடுத்து டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.

எந்திரன், பேட்ட ஆகிய படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்துள்ள 3வது படம் அண்ணாத்த என்பதால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்திரன், பேட்ட ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் அண்ணாத்த படத்தை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில், ‘கிராமத்தானை குணமாத்தானே பார்த்திருக்கே. கோபப்பட்டு பார்த்ததில்லையே. காட்டாறு... அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது’ என்று வீராவேசமாக ரஜினிகாந்த் வசனம் பேசும் காட்சியும், இதை தொடர்ந்து அவர் ஆக்‌ஷன் அதகளத்தில் குதிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை கொடுத்துள்ளது. ரஜினிகாந்த் ஒன்மேன் ஆர்மியாக கலக்கியுள்ள இந்த டீசர், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை 57 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் அண்ணாத்த டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.

Related Stories: