கொரோனாவில் இறந்தவரின் குடும்பத்திற்கு 3 ஆண்டுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி: கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்  தான் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது. தற்போதும் தினசரி 10  ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவி வருகிறது. இந்நிலையில், இந்த  மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் யாராவது கொரோனா  பாதித்து மரணம் அடைந்தால், குடும்பத்திற்கு 3 வருடங்களுக்கு மாதம் ரூ.5  ஆயிரம் நிவாரணம் வழங்க ேகரள அரசு தீர்மானித்துள்ளது.

மரணமடைந்த நபர்  வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இறந்தால், அந்த நபரின் குடும்பம்  கேரளாவில் நிரந்தரமாக வசித்து வருபவர்கள் என்றால் நிவாரண உதவி கிடைக்கும். ஆனால்,  குடும்பத்தில் யாரும் அரசு வேலையிலோ அல்லது வருமான வரி செலுத்துபவராகவோ  இருக்க கூடாது. விண்ணப்பித்து 30 நாட்களில் நிவாரண தொகை வங்கியில் முதலீடு  செய்யப்படும்என்று  அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: