உள்ளாட்சி தேர்தலில் 90.85 சதவீத வெற்றி: திமுக சாதனை

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டது. மொத்தம் 74 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தநிலையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் கட்சி வாரியாக வெற்றிபெற்ற சதவீதத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி மொத்த எண்ணிக்கை 153 ஆகும். இதில், திமுக 139 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, வெற்றி சதவீதம் 90.85 ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்று 5.88 சதவீதமும், அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்று 1.31 சதவீதமும், மற்றவை 1.96 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி மொத்த எண்ணிக்கை 1421 ஆகும். இதில், திமுக 978 இடங்களில் வெற்றி பெற்று 68.82% பெற்றுள்ளது. அதிமுக 212 இடங்களில் வெற்றி பெற்று 14.92%, இந்திய தேசிய காங்கிரஸ் 2.32%, பாஜ 0.56 %, சிபிஐ 0.21%, சிபிஎம் 0.28 சதவீதம், தேமுதிக 0.07 சதவீதம், மற்றவை 12.46 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.

Related Stories:

More
>