புதிதாக 4,900 செவிலியர்கள் எடுக்கும் பணி நடக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையின் புதிய இதய சிகிச்சை மையத்தை நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் ரகுபதி,  சா.மு.நாசர், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, தி.நகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி, மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனியப்பன், நடிகர் பிரபு ஆகியோர்  கலந்து கொண்டனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:   செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்கள். அதற்காக 3 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டு 15 நாளுக்குள் தீர்வு காண பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டுள்ளது. 4,900 செவிலியர்கள் புதிதாக எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 5 கோடியே 29  லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 10 நாட்களில் ஐசிஎம்ஆர்  கூறிய 70 சதவீதம் என்கிற இலக்கை கடக்கவும் உள்ளோம் என்றார்.

Related Stories: